தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டிணத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை ஊராட்சி மன்றத்தலைவர் J.ஜலீலா ஜின்னா துவக்கி வைத்தார்.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்களை அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.இந்நிலையில் மல்லிப்பட்டிணம் பகுதியில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாமை ஊராட்சி மன்றத்தலைவர் காலை 7 மணிக்கு துவக்கி வைத்தார்.
போலியோ பாதிப்பில் இருந்து குழந்தைகளைக் காக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள 5 வயதுக்குட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் இன்று (ஜன.19) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

