Home » CAA குறித்து தாடி வைத்தவர்களுடன் விவாதிக்க தயாரா ? அமித் ஷாவிற்கு அசாதுதின் ஓவைசி சவால் !

CAA குறித்து தாடி வைத்தவர்களுடன் விவாதிக்க தயாரா ? அமித் ஷாவிற்கு அசாதுதின் ஓவைசி சவால் !

0 comment

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், மாணவர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராடி வருகிறார்கள்.

இந்நிலையில் லக்னோவில் நேற்று செவ்வாய்கிழமை(ஜன21) குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை திருத்த சட்டம் ஒருபோதும் திரும்ப பெறப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

அப்போது தொடர்ந்து பேசிய அமித் ஷா, எதிர்கட்சிகள் ஓட்டுவங்கி என்ற திரையால் கண்களை மறைத்துக்கொண்டுள்ளனர். அதனால் அவர்களால் உண்மையை காண முடியாது.

ராகுல் காந்தி, மம்தா, மாயாவதி உள்ளிட்டோர் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நாட்டின் எந்த பகுதியில் வைத்தும் பொதுவெளியில் விவாதிக்க தயாரா ? குடியுரிமை திருத்த சட்டத்தில் ஒருவரது குடியுரிமையை பறிக்கும் ஏதாவது ஒரு அம்சத்தை அவர்கள் எனக்கு காட்டட்டும். எதிர்ப்புகளை கண்டு ஒருநாளும் நாம் பயப்பட மாட்டேன். எத்தகைய போராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை திருத்த சட்டம் திரும்பப் பெறப்படமாட்டாது என்றார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஹைதராபாத் எம்பி-யுமான அசாதுதின் ஓவைசி தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க அமித் ஷா தயாரா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அசாதுதின் ஓவைசி, நீங்கள் என்னுடன் விவாதிக்க வேண்டும். நான் இங்கே இருக்கிறேன். அவர்களுடன் (ராகுல் காந்தி, மம்தா, மாயாவதி) ஏன் விவாதம் செய்ய வேண்டும் ? விவாதம் ஒரு தாடி வைத்த மனிதருடன் இருக்க வேண்டும். CAA, NPR, NRC ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என அமித் ஷாவிற்கு சவால்விட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter