பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் வழியாக ஈசிஆ-ரில் சென்னைக்கு தனியார் ஆம்னி பேருந்து தினமும் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்றும் அந்த தனியார் ஆம்னி பேருந்து, வழக்கம்போல் பட்டுக்கோட்டையில் இருந்து அதிரை வழியாக பயணிகளுடன் சென்னை சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கல்பாக்கத்திற்கு முன்பு மெய்யூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, பேருந்து விபத்தில் சிக்கியது.
இடையில் வந்த இருசக்கர வாகனத்தால் ஏற்பட்ட விபத்தில், ஆம்னி பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.
இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பேருந்து ஓட்டுநர் சுரேஷ் மற்றும் லாரி டிரைவர் படுகாயமடைந்தனர். ஆம்னி பேருந்தில் பயணித்த பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
பட்டுக்கோட்டையில் இருந்து அதிரை வழியாக சென்னை சென்ற தனியார் ஆம்னி பேருந்து இன்று அதிகாலை விபத்தில் சிக்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


