தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து நாளை 01/03/2020 அதிரை ஆட்டோ சங்கத்தினர் சார்பாக பேரணி நடைபெற உள்ளது.
இதனால் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அதிரையில் ஆட்டோக்கள் ஓடாது என அதிரை அனைத்து தெரு ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
மேலும் நாளை மாலை வண்டிப்பேட்டையில் இருந்து ஆட்டோ மூலம் பேரணியாக சென்று அதிரையில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில் முடிவு செய்துள்ளார்கள்.