அதிரையை சேர்ந்தவர்கள் வழக்கறிஞர் நிஜாம்(PFI முன்னாள் பட்டுக்கோட்டை ஜோனல் ப்ரசிடண்ட்), அன்வர் (அதிரை நகர SDPI கட்சி முன்னாள் தலைவர்), சைஃபுத்தீன். இவர்களை நேற்று இரவு எந்த காரணமும் கூறாமல் போலீசார் கைது செய்துள்ளதால் ஏராளமான பொதுமக்கள் காவல் நிலையம் முன்பாக திறண்டனர்.
இது குறித்து SDPI கட்சியினர் கூறியதாவது “அதிரை வண்டிப்பேட்டையில் நேற்று மாலை பைக்கில் வந்துக்கொண்டிருந்த நபர் சாலையோரம் நின்றுகொண்டிருந்த அதிரையர் மீது மோதியுள்ளார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு நின்றுகொண்டிருந்த மேற்குறிப்பிட்ட 3 பேரும் சமாதானம் அவர்களை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்குவந்த போலீசாருக்கும் 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இரவு அதிரை வாய்க்கால் தெரு ரஹ்மானியா பள்ளி அருகே இந்த மூன்று பேரும் நின்று கொண்டிருந்தபோது போலீசார் அவர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்” என அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே காவல் நிலையத்தின் முன்பு நின்றுகொண்டிருந்த கூட்டத்தை போலீசார் விரட்டியதாகவும், அப்போது 14 வயது சிறுவனை காவல்துறையினர் லத்தியை காட்டி துரத்திக்கொண்டு ஓடி, ஒரு கடையில் வைத்து அடித்ததாகவும் தெரிகிறது.
இதனை தட்டிக்கேட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஜியாவுத்தீனையும் காவல் துறையினர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவங்களினால் அதிரையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே கைது செய்யப்பட்ட மூவர் மீதும் பணியை செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டியதாக் கூறி வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.