உலகையே அச்சுறுத்தி கொண்டுள்ள கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது.
இதனை அடுத்து அமல்படுத்த பட்டுள்ள ஊரடங்கில் நாடே ஸ்தம்பித்தன.
இந்நிலையில் அதிராம்பட்டினம் உள்ளிட்ட சில பகுதிகளில் இளைஞர்கள் தேவையின்றி வெளியில் நடமாடுகின்றனர்.
காவல்துறையினர் எவ்வளவோ எச்சரித்தும் இளைஞர்கள் கண்டுகொள்ளாமல் தேவையின்றி வெளியில் நடமாடும் நிலை தொடர்கிறது.
இதனிடையே அவசியமின்றி வெளியில் சுற்றும் நபர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் அவசிய தேவைக்காக வந்து செல்லும் இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த கேட்டு கொண்டதன் பேரில், பிள்ளைமார் தெருவில் அமைந்துள்ள இந்தியன் வங்கி வாசலில் காவல்துறையினர் கையில் பதாகை ஏந்தியவாறு விழிப்புணர்வு நிகழ்த்தினர்.
இதனை நகர காவல் ஆய்வாளர் ஜெயமோகன் துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை காவல் சரகத்தில் உள்ள அனைத்து காவலர்களும் கலந்துகொண்டனர்.



