திமுக., செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெங்கு பிரச்சினை குறித்தும், உட்கட்சி தேர்தல் குறித்தும், ‘நமக்கு நாமே’ திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்தும், மாவட்ட செயலர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். மேலும் கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,”கடந்த சட்டசபை தேர்தலின் போது நடத்தப்பட்ட நமக்கு நாமே பயணம் போல் மீண்டும் எழுச்சி பயணம் நடத்த திட்டமிட்டுள்ளோம். நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கி டிசம்பர் முதல் வாரத்தில் முடிவு பெறும்” என்று தெரிவித்துள்ளார்