பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் CV சேகர் அவர்களுடைய மகன் CVS திலீப் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று ஆலத்தூரில் நடைபெற்றது.அந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர்,துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள்,அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் என அனைவரும் பங்கேற்றனர்.இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் சட்டமன்ற உறுப்பினர் CV சேகர் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு முதல்வர்,துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் திருச்சியில் இன்று நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு சென்றனர்.