தொழில்நுட்பத்தில் பிற பேரூராட்சிகளுடன் ஒப்பிடுகையில் அதிரை சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு சாட்சியம் சொல்லுகிறது அதிரை ஷஃபியின் Luffa Labs என்ற மென்பொருள் நிறுவனம்.
இந்த நிறுவனத்தை நடத்திவரும் அதிரை ஷஃபி மற்றும் குழுவினர் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு மொபைல் அப்பிலிகேஷன்களை உருவாக்கியுள்ளனர். இதன் வரிசையில் இவர்கள் உருவாக்கிய அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி தளத்திற்கான செயலியும்
இணைந்துள்ளது.
முன்னணி செய்தி நிறுவன செயலிகளுக்கு சவால்விடும் வகையில் அதிரை எக்ஸ்பிரஸ் செயலியை Luffa labs நிறுவனத்தினர் இறைவனின் அருளால் சிறப்பாக வடிவமைத்துள்ளனர்.
Android மற்றும் iOS இயங்குதளங்களில் இயங்கும் வகையில் அதிரை எக்ஸ்பிரஸ் செயலிகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன…
காத்திருங்கள் அதிரையர்களின் இணையத்துடிப்பு அடுத்த பரிமாணத்தை நோக்கி முன்னேறட்டும்…