மல்லிப்பட்டிணம் பேருந்துநிலையம் அருகில் அரசினர் மேல்நிலைப்பள்ளி எதிரில் வெஸ்டர்ன் யூனியன் செயல்பட்டு வருகிறது.இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணத்தை பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது.இன்று இரவு 8 மணியளவில் மர்ம நபர்கள் வெஸ்டர்ன் யூனியன் அலுவலகத்தின் சுவரை உடைக்கும் போது அந்தவழியாக சென்ற பொதுமக்கள் சத்தம் போட்டுள்ளனர்.இதை சுதாரித்துக் கொண்ட திருடர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறதுநேரம் பரபரப்பாக காணப்பட்டது.
மல்லிப்பட்டிணத்தில் மர்ம நபர்களின் நடமாட்டங்கள் அதிகரித்த வண்ணம் இருப்பதாகவும்,இங்கு காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லையென்றும்,இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாவண்ணம் அங்குள்ள மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இந்த திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.