இஸ்லாத்தில் வலியுருத்தப்படும் நல்ல குணாதிசயங்களில் மிகவும் முக்கியமான ஒன்று தன் மீதும் தன்னை சார்ந்தோர் மீதும் நன்மையை நாடுதல் என்பதும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்
ஒரு நல்லதை செய்தல் என்பது வேறு அதே நல்லதை பிறருக்கு நாடுதல் என்பது வேறு
பிறருக்கு நல்லதை செய்வதால் ஏதோ ஒரு வகையில் அதை செய்பவருக்கு அதன் சிறு இழப்போ பெரிய இழப்போ அவசியம் ஏற்படும்
அதே நேரம் பிறர்களுக்கு நன்மையை நாடுவதால் கடுகளவும் கூட அதை நாடுபவருக்கு தியாகமோ இழப்போ ஏற்பட போவதில்லை
ஆனால் இதில் கூட நாட்டம் இல்லாத மனிதர்கள் முஸ்லிம் சமூகத்தில் இன்று ஏராளம்
ஒருவரின் முன்னேற்றத்திற்க்கு உதவ முன் வருகிறார்களோ இல்லையோ ஒருவர் வாழ்வில் நஷ்டம் அடைவதை சங்கடப்படுவதை இழப்புகளை எதிர் கொள்வதை மிகவும் எதிர் பார்க்கின்றனர்
தனக்கு நன்மை ஏற்படுகிறதோ இல்லையோ தான் நாடும் ஒருவருக்கு துன்பம் ஏற்படாது போனால் அதற்க்கும் கூட கவலை படும் ஜீரணிக்காத ஈன குணம் உடைய அதிகமான மக்கள் முஸ்லிம்களிலும் உள்ளனர்
தியாகத்திலும் சேவையிலும் முன்னோடியாக வாழ்ந்து காட்டிய சத்திய சஹாபாக்கள் பின் பற்றிய இஸ்லாத்தை ஏற்றுள்ள முஸ்லிம் சமூகத்திடம் இந்த நயவஞ்சக தன்மை குடி கொண்டிருப்பது மிகவும் கேவளமான நடைமுறையாகும்
ஐந்தறிவு பெற்றுள்ள ஜீவராசிகளிடம் கூட இந்த ஈனத்தனமான குணம் இல்லை
பிறர்களின் அந்தரங்க தவறுகளை பரப்பி அதன் மூலம் மகிழ்ச்சி அடைவதும் பிறர்களின் திருமணம் தடை படுவதற்க்கு தவறான பல தகவல்களை பரப்புவதும் பிறர்களின் வேலைகளை கெடுப்பதற்க்கு கள்ளத்தனமாக செயல்படுவதும் பிறர்கள் குடியிருக்கும் வீடுகளை காலி செய்வதற்க்கு மறைமுகமாக முயற்சி செய்வதும் பிறர்கள் மீது மற்றவர்கள் வைத்திருக்கும் கண்ணியத்தை குலைப்பதற்க்கு சூழ்ச்சி வலைகளை பின்னுவதும் இதன் வெளிப்பாடு தான்
ஒருவரின் இழப்பால் அவரை சார்ந்த குடும்பத்தார்களுக்கு எந்தளவுக்கு சிரமங்கள் ஏற்படும் என்பதை விளங்கியும் கூட அவர்களின் மரணத்தில் கூட மகிழ்ச்சி அடையும் கீழ்தரமான குணமுடையோர் ஏராளம்
முஸ்லிம்களுக்கு காஃபிர்கள் கொள்கை ரீதியாக எதிரிகளாய் இருப்பதை விட முஸ்லிம்களாக இருந்து கொண்டே இவர்கள் போல் கெட்ட குணம் உடையவர்களால் ஏற்பட்ட பாதிப்புகளே ஏராளம் தாராளம்
இதில் தங்களை குர்ஆன் ஹதீஸ் நம்பிக்கை உடையோராக காட்டி கொள்ளும் பலர்களும் அடிமைகளாய் இருப்பது மிகவும் ஆச்சரியமான விசயமாகும்
ஆயிரம் கோடி ரூபாய்களை செலவு செய்து சேமித்து வைத்துள்ள மறுமை நன்மையை கூட சாதாரணமாக அழித்து விடும் விஷத்திற்க்கு ஈடான அதை விட கொடுமையான ஒரு தீய குணமே இது
عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنَّمَا يُبْعَثُ النَّاسُ عَلي نِيَّاتِهِمْ
(கியாமத் நாளன்று) மனிதர்களை அவர்களுடைய எண்ணத்திற்கேற்பவே எழுப்பப்படும்” (ஒவ்வொரு மனிதருடனும் அவரது எண்ணத்திற்கேற்றவாறு நடந்து கொள்ளப்படும்) என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்
நூல் இப்னு மாஜா
عَنْ اَبِيْ فِرَاسؒ رَجُلٌ مِنْ اَسْلَمَ قَالَ: نَادَي رَجُلٌ فَقَالَ:يَا رَسُوْلَ اللهِ مَا اْلاِيْمَانُ؟ قَالَ: اَلْإِخْلَاصُ
அஸ்லம் என்ற கோத்திரத்தைச் சார்ந்த ஹஜ்ரத் அபூஃபிராஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், ஒருவர் நபி (ஸல்) அவர்களைக் கூவி அழைத்து, யாரஸூலல்லாஹ், ஈமான் என்றால் என்ன?” என்று கேட்டார், ஈமான் என்பது தூய எண்ணம்” என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்
நூல் -இப்னு மாஜா
J . யாஸீன் இம்தாதி — இமாம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் வேர்கிளம்பி குமரிமாவட்டம்
கட்டுரை தொடர்பான ஆட்சேபனை மற்றும் ஆலோசனைகள் தகவல் தொடர்புக்கு — 9994533265