அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் காலை முதல் இரவு வரை எப்பொழுதும் பரபரப்பு நிறைந்தது. பெரும்பாலான வணிக நிறுவனங்கள்,அதிரையை சுற்றியுள்ள கிராமத்து மக்கள் வந்துபோகும் நிலையில் உள்ளது அதிரை பேருந்து நிலையம்.அப்படியிருக்கையில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் இருந்தும் எரிவதில்லை.அங்குள்ள உயர்ந்த மின்விளக்கு போஸ்ட் பழுதாகிவிட்டது. இதனால் பேருந்துநிலையத்தில் எந்தவித அசம்பாவிதங்கள் நடந்தாலும் தெரிவதற்கு வாய்ப்பில்லை அந்தளவிற்கு அதிரை பேருந்து நிலையம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.பேருந்து நிலையத்திற்கான வெளிச்சம் என்பது அங்குள்ள வணிக நிறுவனங்களின் மூலம் தான் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிரை பேரூராட்சி அலுவலகத்தின் அருகிலேயே இருக்கும் பேருந்து நிலையத்தின் மின்விளக்குகளை சரி செய்யாத அலட்சியம் காட்டும் நிர்வாகமாக இருக்கிறது.மின்விளக்குகள் எரிவதற்கான வழிவகை செய்யவேண்டும் என்பது வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
அதிரையில் இருக்கும் அரசியல் கட்சி,அமைப்புகள்,இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள் இதற்கான நிரந்தர நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்ற ஏக்கத்துடன் பொதுமக்கள் இருக்கின்றார்கள்.