இஸ்லாமிய ஜனநாயக முன்னனி கட்சியின் ஒருங்கினைப்பாளர் சகோதரர் மதுக்கூர் மைதின் மற்றும் அவரது நண்பர் மூர்த்தி ஆகியோர் நேற்றிரவு சுமார் 7.30 மணியளவில் சிவக்கொல்லை என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வெட்டப்பட்டனர்.
இதில் தலையில் பலத்த அரிவாள் வெட்டும் இரண்டு விரல்கள் துண்டிக்கபட்டு பலத்த காயங்கள் ஏற்பட்டன.
இதனிடையே மதுக்கூர் தமுமுக அம்புலன்ஸ் முலம் பட்டுக்கோட்டை வரையிலும் அங்கிருந்து சில்க் சிட்டி ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரிக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கபட்டிருந்த மதுக்கூர் மைதின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் இன்று காலை பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
இதனால் மதுக்கூரில் சற்று பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.