Sunday, December 14, 2025

மதுக்கூரில் இடி தாக்கி ஒருவர் பலி !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் இன்று (30/04/2020) காலை முதலே கனமழை கொட்டி தீர்த்தது. லேசாக தொடங்கிய மழை கன மழையாக மாறி இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்துள்ளது.

இந்நிலையில் இடியுடன் கூடிய மழையால் மதுக்கூரில் இடி தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மதுக்கூர் செய்டித் தெருவைச் சேர்ந்த பன்னீர், பத்தர் தொழில் செய்து வந்தார். அவர் இன்று காலை குளிக்க கரூப்பூர் என்னும் ஏரிக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென இடியுடன் கூடிய மழை பெய்ததில் பன்னீர் மீது இடி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து உடல் மதுக்கூர் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இடி தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளது மதுக்கூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.

மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...

அதிராம்பட்டினம்: அரசுப் பணி சாதனையாளர்களுக்கு விருது – வட்டாட்சியர் சிறப்பு!

அதிராம்பட்டினம் அபுல்கலாம் ஆசாத் கோச்சிங்: TNPSC வெற்றியாளர்களுக்கு விருது விழாஅதிராம்பட்டினம், டிச.14: மௌலானா அபுல்கலாம் ஆசாத் கோச்சிங் சென்டர் சார்பில் TNPSC தேர்வுகளில்...

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img