Monday, May 27, 2024

பறவைகளின் அறிஞர் டாக்டர். சலீம் அவர்களை அதிரைக்கு அறிமுகப்படுத்திய அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4(படங்கள் இணைப்பு)!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 சார்பாக இந்திய பறவைகளின் அறிஞர் டாக்டர் சலீம் அலி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் சுற்றுச்சூழல் மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையை சுற்றுச்சூழல் மன்ற செயலாளர் M.F முகமது சலீம் நிகழ்த்தினார்.வ.விவேகானந்தம் தலைமையேற்றார்.வழக்கறிஞர் ஹாஜி.A.முனாஃப் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியை பேராசிரியர் கா.செய்யது அகமது கபீர் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய பறவைகளின் அறிஞர் டாக்டர் சலீம் அலி அவர்களின் மாணவர் முனைவர் ச.சிவசுப்ரமணியன் அவர்கள் கலந்துகொண்டு டாக்டர் சலீம் பற்றிய பல்வேறு நினைவலைகளையும், பறவைகள் சார்ந்த விளக்கங்களையும்,அழிந்துவரக்கூடிய பறவை இனங்களையும் விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும் ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை மாவட்ட வன அலுவலர் மு.அன்பழகன் அவர்கள் வழங்கினார். பங்கெடுத்த அத்தனை சிறப்பு விருந்தினர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.இறுதியாக சுற்றுச்சூழல் மன்ற பொருளாளர் M.முத்துக்குமரன் நன்றியுரை நிகழ்த்தினார்.இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள்,பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : தீன்ஷா அவர்கள்..!!

தரகர் தெருவை சேர்ந்த அமீர் முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் அகமது...

மரண அறிவிப்பு : பதுருனிஷா அவர்கள்!

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெரு மர்ஹும். மு.க.நா. காதர் தம்பி அவர்களின்...

அதிரை மமகவின் போராட்ட அறிவிப்பால், வழிக்கு வந்த அதிகாரிகள் !

அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை பஞ்சாயதிற்கு உட்பட்ட MSM நகர் பகுதியில் சமீபத்தில் பெய்த...

ஏரிப்புறக்கரை ஊராட்சியை கண்டித்து மமக ஆர்ப்பாட்டம்-அனுமதிகோரி காவல் நிலையத்தில் மனு!

ஏரிப்புரக்கரை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு அதிராம்பட்டினம்...