தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் கிருமிநாசினி இன்று(மே.2) தெளிக்கப்பட்டது.
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலையில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள மாநில,மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவுகளை பிறப்பித்த வண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில் சேதுபவாசத்திரம் ஒன்றியத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி சார்பில் 1,2 மற்றும் 3 வார்டுகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.