தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் கடற்கரைதெரு பகுதிகளில் உள்ள சாக்கடை கழிவுநீர் வடிகாலில் குப்பைகள், பிளாஸ்டிக் பைகள் நிரம்பி காணப்படுவதால் கழிவுநீர் செல்வதற்கு வழியில்லாமல் சாக்கடை நீர் வெளியேறி சாலையில் வழிந்தோடும் நிலையில் இருந்தது.
இதன்காரணமாக சாக்கடைநீர் வெளியேறுவதால் சுகாதர சீர்கேடு ஏற்பட்டு நோய்கள் பரவும் வண்ணம் ஆபத்தான நிலையில் இருந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், சிறுவர்கள் என அனைவரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.மேலும் பேரூராட்சியின் முறையான பராமரிப்பின்றி இருந்ததால் கழிவுநீர் வடிகால் என்பதற்கான அடையாளமே இல்லாமல் சாக்கடைநீர் செல்லக்கூடிய பரவலான இடங்களில் சேதமடைந்து இருந்தது.
அதிரை பேரூராட்சி நிர்வாகம் சீரமைக்கும் என்றே எதிர்ப்பார்த்தவர்களுக்கு எப்போதும் போல் ஏமாற்றமே பதிலாக இருந்தது.
இதனையடுத்து கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர்கள் நற்பணிமன்றத்தினர் இதற்கான நிதிஉதவியை பெற்று ஆட்களை வைத்து பல ஆண்டுகளாக சேதமடைந்த வடிகால்களை மறுசீரமைப்பு செய்து,சாக்கடை நீர் சாலைகளில் நிரம்பி வெளியேறாமல் இருப்பதற்காக நீண்ட குழாய்களை அமைத்தனர்.
அரசுநிர்வாகம் செய்யக்கூடிய பணிகளை தொடர்ந்து அதிரை இளைஞர்கள் செய்து வருவது மற்ற மற்ற ஊர்களில் வசிக்கும் மக்களுக்கு முன்னுதாரணமாகவும்,ஆர்வத்தையம் ஏற்படுத்துகிறது.