கொரோனா தொற்று காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் வெளிநாடுகளில் தங்கி படிக்கும் மாணவர்கள், சுற்றுலா பயணிகள், மருத்துவத்திற்காக சென்ற நோயாளிகள், தொழிலாளர்கள் என பல்லாயிரக்கணக்கான தமிழக மக்கள் பல மாதங்களாக தமிழகம் வரமுடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இவர்களை பத்திரமாக தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும், தமிழகம் அழைத்து வருவதற்கான அனைத்து செலவுகளையும் மத்திய, மாநில அரசுகளே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இணையவழி போராட்டம் நடைபெற்றது.
அதன் ஒருபகுதியாக அதிரையிலும் பல்வேறு இடங்களில் இணையவழி போராட்டம் நடைபெற்றது. அதிரை ஈசிஆர் சாலையில் உள்ள தவ்ஹீத் பள்ளி முன் நடைபெற்ற இணையவழி போராட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை ராஜிக் முகம்மது, கிளை தலைவர் நவாப்ஸா, கிளை செயலாளர் ஹபீபுர் ரஹ்மான் உள்ளிட்டோர் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து கோஷங்களை எழுப்பினர்.







வீடியோ :