தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலான தொகை வசூலிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு.
மல்லிப்பட்டிணம் துறைமுகத்திற்குள் நுழைவதற்கு வாகன நுழைவு கட்டணம்,டீ கடை ,இட்லி கடை மற்றும் தள்ளுவண்டி கடைகளுக்கு கடந்த ஜூன்.12 அன்று ஏலம் விடப்பட்டது.அதில் ஒவ்வொரு வாகனத்திற்கேற்ப விலையை மீன்வளத்துறை அதிகாரிகள் நிர்ணயம் செய்தனர்.
அதனடிப்படையில் நான்கு சக்கர வாகனமான காருக்கு 25 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அதற்கு மாறாக 50 ரூபாய் கூடுதல் விலை வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.இவ்வளவு கூடுதல் கட்டணமா என்று சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.
மேலும் கூடுதல் கட்டணம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு நுழைவு வாயில்களிலும் நுழைவு கட்டணம் நிர்ணய பட்டியலை பொதுமக்களுக்கு தெரியும் வண்ணம் அமைக்க வேண்டும் என்று சுற்றுலாவாசிகள் கோரிக்கை வைக்கின்றனர்
