தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த சில தினங்களாக புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதேபோல் , தரகர் தெரு பகுதியில் ஒரு சில வாரங்களுக்கு முன்பு புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.
அமைக்கப்பட்ட சில தினங்களிலேயே சாலை பழுதாகியது.
இதுகுறித்து தரகர் தெரு இஸ்லாமிய நற்பணி மன்றம் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் அதிரை பேரூராட்சியில் கோரிக்கை விடுத்துள்ளனர்.