கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை மினி ஷாதிமாஹாலில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ) மற்றும் இந்திய மாணவர் முன்னணி (ISF) நடத்தும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்க்களுக்கான “கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் ” நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை சுகாதார துறை ஆய்வாளர் R.ரிச்சர்ட் எட்வின்ராஜ் அவர்கள் “டெங்கு குறித்து விழிப்புணர்வு ” உரை நிகழ்த்தினார்.
அடுத்து பரங்கிப்பேட்டை காவல் துறை ஆய்வாளர் D.செல்வம் அவர்கள் “போக்குவரத்து, சாலை விதிமுறை குறித்து விழிப்புணர்வு” உரை நிகழ்த்தினார்.
அடுத்ததாக S-IAS Academy-ன் நிர்வாக இயக்குனர் Prof.Dr.சே.மு.மு.முகமதலி அவர்கள் மாணவர்களுக்கு சிறப்பாக விழிப்புணர்வு உரையாற்றினார்.
அடுத்ததாக இந்திய மாணவர் முன்னணி (ISF) ஒருங்கிணைப்பாளர் I.முஹம்மது முனீர் அவர்கள் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்
இறுதியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M.பாக்கர் அவர்கள் மாணவர்களுக்கான சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச்செயலாளர் A.முஹம்மது ஷிப்லி மற்றும் சிறப்பு விருத்தினர்கள், ஊர் பொதுமக்கள்,மாணவ, மாணவிகள் 300 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு INTJ தாவா குழு சார்பாக இஸ்லாம் குறித்து ஸ்டால் தாவா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டபிரிவு
தகவல் :
INTJ ஊடக பிரிவு