திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை , தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆகிய பகுதிகளில் பொதுவாகவே நிறைய இஸ்லாமியர்கள் அதிகமாக வசித்துவருகின்றனர்.அதேபோல் , அதிரை மற்றும் முத்துப்பேட்டை பகுதியில் இஸ்லாமிய பண்டிகைகள் மற்றும் மிக்கிய நிகழ்ச்சிகள் மிகவும் பிரம்மண்டமாக கொண்டாடப்படும்.அதிராம்பட்டினம் மற்றும் முத்துப்பேட்டை பகுதியில் பல வருடங்களாக புஹாரி ஷரீபு நிகழ்ச்சி வருடத்தில் 40நாட்கள் நடைபெறுவது வழக்கம்.இதையடுத்து, முத்துப்பேட்டையில் வருகின்ற (21/11/2017) செவ்வாய்க்கிழமை அன்றுமுதல் துவங்கி (20/12/2017) புதன்கிழமை அன்று முடிவு பெறுகிறது.இந்நிகழ்வு , முத்துப்பேட்டை தெற்கு தெரு அரபுசாகிப் பள்ளிவாசல் மதரசாவில் காலை சுபுஹ் தொழுகைக்கு பிறகு மஜ்லிஸ்(நிகழ்ச்சி) துவங்கி காலை 07:45மணிவரை ஹதீஸ் ஒத்தப்பட்டு அதன் பிறகு சுமார் 08:30 வரை அதனின்விளக்கம்(பயான்) அளித்து பிறகு துவா ஓதி நிறைவு செய்யப்படும் என புஹாரி ஷரீபு நிர்வாகம் அறிவித்தது.இந்நிகழ்வில் ஊர் நன்மைக்காக , நிம்மதியான வாழ்க்கை மற்றும் பல விதமான பிரச்சனைகளுக்கு இறைவனிடம் பிராதனை செய்யப்படும்.
முத்துப்பேட்டையில் 21ஆம் தேதி முதல் புஹாரி ஷரீபு நிகழ்ச்சி துவக்கம்…!
98
previous post