85
சவூதி அரேபியவின் ஜித்தா நகரில் பக்கா என்ற இடத்தில் கனமழை பெய்து வருகிறது.ஏற்கனவே அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை அறிவித்திருந்தது.
இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்டிருந்தது.இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதனால் வாகனங்கள் சாலைகளில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். மழையின் காரணமாக வீதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.