கேரள மாநிலம் தாம்பனூர் ரயில் நிலைய வளாகத்தில் வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் குப்பை தொட்டியில் கிடந்த உணவை எடுத்து சாப்பிட்டுள்ளார்.
அப்போது அலுவலகத்தில் பணிபுரியும் பலர் அப்பகுதியில் அவ்வப்போது வந்து செல்வது வழக்கம் இந்நிலையில் குப்பையில் கிடந்த உணவை சாப்பிட்ட வயதான பெண்மணியை பார்த்த ஒருவர் அதிர்ச்சியுற்றார். மலப்புரம் பள்ளியில் கணித ஆசிரியராக இருந்த முன்னாள் ஆசிரியர் என்பதை உணர்ந்தார் அந்த முன்னாள் மாணவர் தாமஸ்.
பின்னர் அந்த வயதானபெண்ணுக்கு
நல்ல உணவுகள் வாங்கி கொடுத்து அவரின் பாதுகாப்பை உறுதி செய்தார்.
இந்த பெண் ஆசிரியரிடம் படித்து நல்ல நிலையில் பணிபுரியும் முன்னாள் மாணவர்களை அறிய சமூக வலைத்தளங்களில் ஆசிரியரின் நிலையை பதிவேற்றம் செய்ததில் முன்னாள் மாணவர்கள் உதவ முன்வந்தனர்.
கணவன் இருந்து பிள்ளைகளால் கைவிடப்பட்ட இந்த வயதான பெண் முன்னாள் ஆசிரியர் தற்போது பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் மாணவர்களை பார்த்து பலர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.