தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்ரு காலை திருச்சியில் அமைப்பின் தலைவர் ஷம்சுல் லுஹா தலைமையில் நடைபெற்றது .இதில் தமிழக இஸ்லாமிய சமுதாயத்தின் நீண்டகால ஜீவாதார கோரிக்கையான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் பல கட்டங்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 3.5 % உள் ஒதுக்கீட்டை அன்றைய தமிழக அரசு வழங்கியது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குவேன் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இன்று வரைக்கும் இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீடு உயர்த்தப்படவில்லை. என்றும் இதனை தமிழக அரசு 3.5 % இடஒதுக்கீட்டை 7 % ஆக உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் வாழும் இஸ்லாமிய மக்களை தனிமைப்படுத்தி அகதிகளாக மாற்றும் வகையில் இயற்றப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக இஸ்லாமிய கட்சிகள் அனைவரும் ஓரணியில் இணைந்து அரசியல் கட்சிகளிடம் அதிகமான பிரதிநிதித்துவத்தைப் பெற்று இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டும்.
இஸ்லாமிய அரசியல் கட்சிகள் பல அணிகளில் இணைந்து எதிர் அணியாக போட்டியிடுவது இஸ்லாமிய சமூகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை தரும் என்பதை உணர்ந்து அனைத்து கட்சிகளும் ஒரே அணியாக இணைந்து போட்டியிட்டு அதிகமான அதிகமான சட்ட உறுமன்ற உறுப்பினர்களைப் பெற்று அதன் மூலம் சமுதாயத்தின் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் எதிரொலிக்க வேண்டும் என்று இந்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஃபிரான்ஸ் நாட்டில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தொடர்ச்சியாக நமது உயிருனும் மேலான நபிகளாரை இழிவுபடுத்தும் செயல்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
உலக மக்கள் பல கோடிபேர் தங்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கும் ஒரு தலைவரை இழிவுபடுத்தும் செயலை எந்த ஒரு நாடும் ஆதரிக்கக் கூடாது, அந்தக் கொடும் செயலைச் செய்பவர்களுக்கு ஊக்கம் அளிக்க கூடாது, அது போன்ற செயல்களை செய்து வன்முறையைத் தூண்டுபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை தமிழ் நாடு தவ்ஹீத் நிறைவேற்றியுள்ளன.