115
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் இன்று 23.11.2017 இளையான்குடியில் தங்கள் உறவினர் வீட்டு கல்யாணத்திற்கு வாகனத்தில் கோட்டைப்பட்டினத்திலிருந்து சென்றுள்ளனர்.பின்னர் கல்யாணத்தை முடித்துவிட்டு ஊர் திரும்பியுள்ளனர் வாகனம் இராமநாதபுரம் மாவட்டம் பாசிப்பட்டினம் அருகே வந்து போது இவர்கள் வாகனத்திற்கு பின்னே வந்த ஒரு வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது இதில் இரண்டு வாகனமுமே நிலைகுலைந்து போனது இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர்கள் சென்ற வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த அயூப்(55) ஜாகிரா(67)சரிபுநிஷா(50) சபிகா(4) ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.