மத்திய அரசு அமல்படுத்த நினைக்கும் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் ஒரு மாதத்திற்கு மேலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஓவ்வொரு மாவட்டங்களிலும் எதிர்கட்சிகள் சார்பாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதிரையில் இன்று (03.11.2021) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் அதிரை பேரூந்து நிலையம் அருகே அதிரை நகர SDPI கட்சி சார்பாக வேளாண் சட்டங்களை எதிர்த்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி செயலர் நா.இளந்தென்றல்,
தஞ்சை மாவட்ட இந்திய தேசிய காங்கிரசின் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ராமசாமி B.Sc.,B.L , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் சி.பக்கிரிசாமி, SDPI கட்சியின் தேசிய துணைத் தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
ஆரப்பாட்டதின் இடையே மழை குறுக்கிட்டாலும் ஆர்ப்பாட்டம் எந்தவித சலனமும்மின்றி தொடர்ந்து நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 500க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.








