Home » அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் சிட்னி அணி சாம்பியன் !(படங்கள்)

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் சிட்னி அணி சாம்பியன் !(படங்கள்)

0 comment

அதிரை சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்தும் 14ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி கடந்த 6ம் தேதி முதல் இன்று வரை 4 நாட்களாக நடந்து வந்தது. இந்த கிரிக்கெட் தொடரில் அதிரை சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் வெளியூர்களை சேர்ந்த பல கிரிக்கெட் அணிகள் பங்கேற்று விளையாடின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இத்தொடரில் சிறப்பாக விளையாடிய சிட்னி A அணியும் தம்பிக்கோட்டை அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இன்று காலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அதிரை சிட்னி A அணி தம்பிக்கோட்டை அணியை வீழ்த்தி இறுதி போட்டியில் வெற்றி பெற்றது. இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற அதிரை சிட்னி ஏ அணி, வெற்றிக்கோப்பையையும் ரூ. 15,000 பரிசுத் தொகையையும் வென்றது.

இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்து இரண்டாம் இடம் பிடித்த தம்பிக்கோட்டை அணிக்கு 2வது பரிசான ரூ. 10,000ம், 3 மற்றும் 4ம் இடங்களை பிடித்த அதிரை RMCC மற்றும் சிட்னி B அணிகளுக்கு தலா ரூ. 5,000 பரிசுத் தொகையையும் வழங்கப்பட்டது. மேலும் இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை பாராட்டி சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter