அதிராம்பட்டினம் – பட்டுக்கோட்டை சாலையில் சேண்டாக்கோட்டை அருகே நிகழ்ந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்தனர்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் ரியாஸ் அகமது. இவர் பட்டுக்கோட்டையில் வேலை செய்து வருகிறார். பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் அசோக். இவர் அதிராம்பட்டினத்தில் வேலை செய்து வருகிறார்.
ரியாஸ் அகமது வேலை முடிந்து அதிரைக்கும், அசோக் வேலை முடிந்து பட்டுக்கோட்டைக்கும் திரும்பி கொண்டிருந்தனர். இருவரும் தனித்தனி இருசக்கர வாகனத்தில் சேண்டாகொட்டை அருகே நேரெதிரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது.
இந்த எதிர்பாராத விபத்தில் ரியாஸ் அகமது, அசோக் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

