கஞ்சிபுரம் கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்த காமேஷ் என்ற எட்டாம் வகுப்பு மாணவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
மழைகாரணமாக தொடர் விடுமுறை விடப்பட்டு மீண்டும் பள்ளிகள் திறந்த நிலையில் அதிக பாடங்கள் படிக்க வேண்டியிருப்பதால் மன உளைச்சல் ஏற்பட்டு இந்த முடிவை எடுத்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலை இருப்பதால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். சம்பவம் பற்றி பாலுச்செட்டி சத்திரம் போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
இதனிடையே, கோவை சோமனூர் பகுதியைச் சேர்ந்த அருள்செல்வம் என்ற தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிளஸ்-2 படித்து வந்த அருள்செல்வம் ஆசிரியர் அடிக்கடி திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.