நாளிதழ், வானொலி, தொலைக்காட்சிகளுக்கு பேட்டி தர அதிமுக நிர்வாகிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ஊடகங்களுக்கு பேட்டி தரக்கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர் . அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொருவரும் மாறுப்பட்ட கருத்து கூறுவதை தடுக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இருந்த போது எந்த ஒரு அமைச்சரும், எம்.எல்.ஏ.வும் பேட்டி எதுவும் தரமாட்டார்கள். அவர் மறைவுக்கு பிறகு பல்வேறு அமைச்சர்கள் மாறுப்பட்ட கருத்து தெரிவித்து சலசலப்பை ஏற்படுத்தி வந்தனர். இதற்கு முடிவு கட்டும் விதமாக அதிமுக தலைமை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது என்று கூறப்படுகிறது . ஆனால், இந்த உத்தரவை ஏற்று அமைச்சர் ஜெயக்குமார் கட்டுப்படுவாராஎன்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனனில் அவர் ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு தினமும் பேட்டி தருவது வழக்கமாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊடகங்களில் பேட்டித்தர அதிமுக நிர்வாகிகளுக்கு தடை -அதிமுக தலைமை
101
previous post