Home » அதிரை எக்ஸ்பிரஸ் – ன் ரமலான் நேரலையை பாருங்கள் : தங்க நாணயத்தை வெல்லுங்கள்!!

அதிரை எக்ஸ்பிரஸ் – ன் ரமலான் நேரலையை பாருங்கள் : தங்க நாணயத்தை வெல்லுங்கள்!!

0 comment

ஊடகத்துறையில் அதிரையின் நெ.1 ஊடகமான “அதிரை எக்ஸ்பிரஸ்” 14 ஆண்டுகள் கடந்து 15ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த ரமலானில் இஸ்லாமிய கேள்வி-பதில் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி ரமலான் பிறை 01 முதல் இரவு 10 மணிக்கு நமது அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் ஒளிபரப்பாகும் ஹிஜ்ரி 1442 ரமலான் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியின் ஒவ்வொரு நாளின் இறுதியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு போட்டியாளர்கள் பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு 20 நாட்களுக்கு தலா 4 கேள்விகள் வீதம் 80 கேள்விகள் கேட்கப்படும். Google sheet மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு போட்டியாளர்கள் சரியான விடையை தேர்வு செய்தால் போதும்.

முன்னதாக Google sheet-ல் தங்கள் பெயர், தந்தை பெயர், பாலினம், வயது, ஊர் ஆகிய தகவல்களை பதிவு செய்ய வேண்டும். இந்த போட்டியின் முதல் இடம் வரும் நபருக்கு “தங்க நாணயம்” பரிசாக வழங்கப்படும். இரண்டாம் இடம் பிடிக்கும் நபருக்கு மிக்சி-யும் வழங்கப்பட உள்ளது. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் நிச்சயம் உண்டு.

குறிப்பு: முதல் 3 தினங்களுக்குள் போட்டியில் புதிய போட்டியாளர்கள் பங்கேற்க வேண்டும். விடுபட்ட தினங்களுக்கான பிரத்யேக கேள்விகள் அவர்களுக்கு என தனியாக அனுப்பப்படும்.

போட்டி குறித்த சந்தேகங்களுக்கு +91 95510 70008, +91 790459 8687 என்ற எண்களை தொடர்புக் கொள்ளுங்கள்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter