கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழக மக்களின் அத்தியாவசிய பொருட்கள் தேவையை நிவர்த்தி செய்வதில் ரேசன் கடைகள் முக்கிய பங்கு ஆற்றுகின்றன. இந்த சூழலில் அதிரை ரேசன் கடைகளில் பயோ மெட்ரிக் முறையாக இயங்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டோர் நம்மிடம் கூறுகையில், எங்களது ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி கடந்த காலத்தில் ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கினோம். ஆனால்
பொது விநியோக மென்பொருள் தற்போது எங்களின் பயோ மெட்ரிக்கை ஏற்க மறுக்கிறது. இதன் காரணமாக எங்களுக்கான அத்தியாவசிய பொருட்களை பெற முடியாத சூழல் இருப்பதாக கூறினர். மேலும் இந்த பிரச்சனைக்கான தீர்வை பெற தாலுக்கா அலுவலகம் செல்லுமாறு ரேசன் கடை ஊழியர்கள் கூறுவதாகவும், முழு ஊரடங்கு அமலில் உள்ளநிலையில் எவ்வாறு தாலுக்கா அலுவலகம் செல்ல முடியும் என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
அதிரை ரேசன் கடைகளில் கோளாறு! பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி!!
184