79
பட்டுக்கோட்டை சுற்றுவட்ட சாலையில் இன்று பிற்பகல் நடந்த கோர விபத்தில், இருசக்கர வாகத்தின் மீது அவ்வழியாக சென்ற கனரக வாகனம் பலமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண், நிலைகுலைந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து காவல்துறையினர் கனரக வாகன ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.