தேதி:11/06/2021 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 88-வது மாதாந்திர கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:- கிராஅத் : சகோ. நெய்னா முகமது (ஒருங்கிணைப்பாளர் ) முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் ) வரவேற்புரை : சகோ. N.அபூபக்கர் ( பொருளாளர் ) சிறப்புரை : A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் ) அறிக்கை வாசித்தல் :சகோ. ஷேக் மன்சூர் ( துணை செயலாளர் ) நன்றியுரை : சகோ. ரியாஸ் அஹமது ( உறுப்பினர் ) தீர்மானங்கள்: 1) கடந்த வருடங்களைப்போல் இன்ஷா அல்லாஹ் இவ்வருடமும் ABM-ன் தலைமையகம் மூலம் கூட்டுக்குர்பானி திட்டத்தின் படி RS.2200/- என்பதான தகவலை அங்கிருந்து வந்த நோட்டிஸ் வாசிக்கப்பட்டு அதற்கான பங்கு தாரர்கள் அடுத்த மாதம் 15-தேதிக்குள் பெயர்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
2) பைத்துல்மால் மூலம் செம்மையாக செயல்பட்டு வரும் கூட்டுக்குர்பானி, தனி நபர் குர்பானி இவைகளுக்கு முழு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்குமாறு நமதூர் வாசிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
3) கடந்த நோன்பில் ஏழைகளின் உதவித்திட்டமான ரமலான் கிட் மற்றும் பித்ரா விநியோகித்ததை சிறப்பாக சரியான நேரத்தில் செயல்படுத்திய தலைமை பொறுப்புதாரிகளை இக்கூட்டத்தில் நன்றியினையும் பாராட்டையும் தெரிவிக்கப்பட்டது.
4) அல்ஹம்துலில்லாஹ் இவ்வருடமும் ABM ரியாத் கிளை சகோதரர்களின் உதவியினால் சாந்த+பித்ரா+ரமலான் கிட், சதக்கா ஒரு கணிசமான தொகையை உதவிய அனைவர்களுக்கும் இக்கூட்டத்தில் நன்றி தெரிவித்து இது போன்று என்றென்றும் ஆதரவும், பொருளாதார உதவியும் நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
5) தலைமயக்கத்திலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலைவிஷயமான வந்த கடிதத்தை வாசித்து அதற்கான அத்தியாவசிய நமதூருக்கு தேவையினை தெளிவுபடுத்தி அதற்கான அமெரிக்காவில் வாழும் நமதூர் பொது சேவை தொண்டு நிர்வணமான AAF ( AMERICAN ADIRAI FORUM ) முயற்சியினை பாராட்டியும் அதற்கு முழு ஒத்துழைப்பும் இயன்ற அளவு பொருளாதார உதவிடுமாறும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் அதற்கான தொகையை வசூல் செய்து தலைமையகத்திற்கு அனுப்பி வைப்பது என தீர்மானிக்கப்பட்டது. ஆகவே நமதூர்வாசிகள் உங்களால் முடிந்தளவு இத்திட்டத்திற்கு உதவிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்டது.
6) இலவச அரசு திட்டங்களான பென்ஷன் , மருத்துவ காப்பீடு திட்டம், கல்வி உதவி மற்றும் ஏழைகளின் உதவி திட்டங்கள் விசயமாக புதிய தமிழக அரசிடம் தொடர்ச்சியாக அதற்கான பொறுப்புதாரிகளிடம் மனுக்களை செலுத்தி பெறுவதற்கான ஏற்பாடுகளை ABM தலைமையகம் முயற்சிக்குமாறு இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
7) நமதூர் மக்கள் கடந்த இரண்டு மாதங்களாக இறையடி சேர்ந்த பல பேர்களுக்காகவும், மற்றும் ABM-ன் நிர்வாக முந்தைய பொறுப்புதாரியான மர்ஹும் அக்பர் ஹாஜியார் அவர்களின் ஆஹிரத்திற்காகவும் துஆ செய்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
8) இன்ஷா அல்லாஹ் அடுத்த 89-வது அமர்வு JULY மாதம் 9-தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும். அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்டு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.