அதிரை அருட்கவிஞர் தாஹா அவர்களின் மறைவுக்கு பட்டுக்கோட்டை எம்எல்ஏ கா. அண்ணாதுரை இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
அதிராம்பட்டினத்தின் மூத்தவர் மரியாதைக்குரிய முகமது தாஹா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கிடைத்து மிகுந்த துயறுற்றேன்.
நான் சார்ந்துள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் தோழமை கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் அதிரை கிளையில் நிர்வாகியாகவும், திமுக மீது பற்றுதல், இஸ்லாமிய நெறிமுறைகளை முறையாக கடைப்பிடித்தல் என இவரின் சமூக பணிகள் என்னில் அடங்காதது.
குறிப்பாக இவர் இயற்றிய நூல்கள் இன்றளவும் தமிழ் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்கிறது என்பதை நினைவில் நிறுத்தி, அன்னாரின் ஆன்மா இறைவனின் திருவருடி நிழலில் இளைப்பார இறைவனிடம் வேண்டுகிறேன்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், கட்சி தொண்டர்கள், இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
