கொச்சி: ஒக்கி புயல் காரணமாக லட்சத்தீவிற்கு ரூ.500 கோடி வரையில் இழப்பு ஏற்பட்டதாக எம்.பி., முகம்மது பைசல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த சில தினங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி பகுதியில் உருவனா ஒக்கி புயல் கரையை கடந்து லட்ச தீவுக்கு அருகே வந்தது. இதன் காரணமாக ஏற்பட்ட புயல் சீற்றத்தினால் லட்சத்தீவு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
லட்சத்தீவு களில் அதிகம் பேர் வசிக்கும் பகுதியான மினிகாய், கவராட்டி, மற்றும் கல்பேனி ஆகிய பகுதிகள் பெரிதும் பாதித்துள்ளது. கடல் நீரை குடிநீராக்கும் ஆலையும் பாதித்துள்ளது. மக்களின் இயல்புவாழ்க்கை திரும்புவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும். என கூறினார்.