அதிரை எக்ஸ்பிரஸ்:- டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தையொட்டி பாபர் மஸ்ஜித் இடிப்பு 25 ஆண்டு கால தேசிய அவமானம் என்ற முழக்கத்துடன் SDPI கட்சி நீதி கோரி ஆர்ப்பாட்டம் இந்தியா முழுவதும் நடத்துகிறது. அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்ட SDPI கட்சியின் சார்பாக பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
SDPI கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் Z.முகமது இல்யாஸ் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.கட்சியின் மாவட்ட,தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
SDPI கட்சியின் மாநிலப்பேச்சாளர் M.மஹ்பூப் அன்சாரி பைஜி மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்டத் தலைவர் A.ஹாஜா அலாவுதீன் இருவரும் கண்டன உரை நிகழ்த்த உள்ளனர்.
SDTU மாவட்ட தலைவர் M.அமானுல்லா நன்றியுரை நிகழ்த்த உள்ளார்.