அதிரை எக்ஸ்பிரஸ்:- சென்னை மூர் தெருவில் உள்ள கபீர் ஹாஜியார் இல்லத்தில் இன்று மதியம் சுமார் 60 சவரன் நகை கொள்ளை போனது.
அதிரை புதுமனை தெருவை சேர்ந்த கபீர்ஹாஜியார் தொழில் நிமித்தம் சென்னை மூர் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இன்று மதியம் வீட்டில் உள்ள பெண்கள் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு சற்று நேரத்தில் வீடு திரும்பியுள்ளனர் இதற்கு இடைப்பட்ட நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையன் லாக்கரில் இருந்த சுமார் 60 பவுன் தங்க நகையை கொள்ளையடுத்து சென்றுள்ளனர்.
இது குறித்து சென்னை B2 காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.