இயற்கையான உலக அமைப்பு வழக்கத்திற்க்கு மாற்றமாக சில நிமிடங்கள் அல்லது சில நாட்கள் மாறுபட்டாலே அதன் மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை மனிதனால் தாங்கவே இயலாது என்பதை அடிக்கடி நினைவூட்டும் நிகழ்வுகள் தான் பூகம்பம் புயல் வறட்சி போன்ற இயற்கை சிறு அழிவுகளும் பெரு அழிவுகளும்.
இவைகளின் மூலம் ஏற்படுகின்ற பாதிப்புகளை சந்திக்கும் போது கடவுளிடம் அழுது புலம்பி கை ஏந்தும் மனித சமுதாயத்தவர்கள் அவைகள் சீராக செயல் பட்டு ஒவ்வொரு விநாடியும் மனிதனுக்கு உபயோகமாக இருந்து வரும் காலங்களில் அவைகளை படைத்த இறைவனின் ஆற்றலை சிந்திப்பதும் இல்லை இறைவனுக்கு நன்றி செலுத்துவதும் இல்லை
இறைவனை மறுத்து காண்பவை எல்லாமே இயற்கையின் செயல் என்று கூறும் நாத்தீகவாதிகள் அந்த இயற்கை சூழல்களுக்கே ஏன் இது போல் அழிவுகள் அடிக்கடி ஏற்படுகிறது என்பதை ஒரு முறை கூட சிந்திப்பது இல்லை
அறிவியல் துணை கொண்டு அனைத்தையும் மனிதனால் வெல்ல முடியும் என்று ஆணவம் பேசும் நாத்தீகவாதிகளால் அதே அறிவியல் துணை கொண்டு இயற்கை பேரழிவுகளை ஏன் வெல்ல முடியவில்லை ?
குறைந்த பட்சம் சிறிதளவேனும் அதன் பாதிப்புகளை கூட ஏன் தடுக்க முடியவில்லை ?
காரணம் இவையாவும் இயற்கையின் சீற்றம் அல்ல மாறாக இயற்கையை படைத்த ஏக வல்லோனாகிய சர்வ சக்தன் இறைவனின் சீற்றம்
இயற்கை ஆற்றலை பார்த்து இறைவனை மறுக்கும் கூட்டம் அந்த இயற்கைக்கே பேரழிவை தரும் இறைவனின் வல்லமையை அறிந்து அவனை மட்டும் வணங்க முன் வர மாட்டார்களா என்ற படிப்பினையே இயற்கை மாற்றங்கள் தரும் பாடம் ஆகும்
மனிதர்களின் தேவைகளை அறிந்து இயற்கை சீராக நடப்பது இல்லை மாறாக மனிதனின் தேவைகளை உருவாக்கிய இறைவனின் கட்டளைகளுக்கு இணங்கியே இயற்கை சீராக நடக்கிறது
மனிதர்களிடம் பாவங்களும் நன்றி கெட்ட தன்மைகளும் கூடும் போது அதை கண்டிக்கும் விதமாக இறைவன் போடும் சில உத்தரவுகளே இயற்கை சீற்றங்கள் அதன் மூலம் ஏற்படும் பல மாற்றங்கள்
இயற்கையை மீறி மனிதனால் நடக்க இயலாது அந்த இயற்கையும் இறைவனின் கட்டளையை மீறி நடக்க இயலாது என்பதுவே எதார்த்த உண்மையாகும்
சீராக இயங்கும் மனிதனின் உடல் சில நேரங்களில் இயலாமை எற்படுவதை போலே இயற்கைக்கு இறைவன் ஏற்படுத்தும் இயலாமையே சீற்றங்கள் எனும் நோய்
நோய்கள் தாக்கும் எந்த ஒன்றும் உலகில் நிலையாக இருப்பது இல்லை மடிந்தே தீரும் என்பதை போலவே இயற்கை எனும் ஒட்டு மொத்த பிரபஞ்சமும் ஒரு நாள் நிச்சயம் இறைவனால் அழிக்கப்படும்
அந்த அழிவுக்கு பின்னால் இறைவன் ஏற்படுத்தும் மறு பிரபஞ்சமே சொர்க்கம் நரகம்
நீங்கள் சொர்க்கவாதியாக மாற ஆசைபட்டால் இயற்கையை படைத்த இறைவனை மட்டும் வணங்குங்கள்
நட்புடன் J .இம்தாதி
فَاذْكُرُوْنِىْٓ اَذْكُرْكُمْ وَاشْکُرُوْا لِىْ وَلَا تَكْفُرُوْنِ
ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள் நானும் உங்களை நினைவு கூறுவேன் இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள் எனக்கு மாறு செய்யாதீர்கள்
(அல்குர்ஆன் : 2:152)
مَا يَفْعَلُ اللّٰهُ بِعَذَابِكُمْ اِنْ شَكَرْتُمْ وَاٰمَنْتُمْ وَكَانَ اللّٰهُ شَاكِرًا عَلِيْمًا
நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால் உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான் ?
அல்லாஹ் நன்றியை அறிபவனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான்
(அல்குர்ஆன் : 4:147)
اَلَمْ يَرَوْا كَمْ اَهْلَـكْنَا مِنْ قَبْلِهِمْ مِّنْ قَرْنٍ مَّكَّنّٰهُمْ فِى الْاَرْضِ مَا لَمْ نُمَكِّنْ لَّـكُمْ وَاَرْسَلْنَا السَّمَآءَ عَلَيْهِمْ مِّدْرَارًا وَّجَعَلْنَا الْاَنْهٰرَ تَجْرِىْ مِنْ تَحْتِهِمْ فَاَهْلَكْنٰهُمْ بِذُنُوْبِهِمْ وَاَنْشَاْنَا مِنْ بَعْدِهِمْ قَرْنًا اٰخَرِيْنَ
அவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் நாம் உங்களுக்கு செய்து தராத வசதிகளை எல்லாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம் அவர்கள் மீது நாம் வானம் தாரை தாரையாக மழை பெய்யுமாறு செய்து, அவர்களுக்குக் கீழே ஆறுகள் செழித்தோடும்படிச் செய்தோம்; பிறகு அவர்களின் பாவங்களின் காரணத்தால் அவர்களை அழித்து விட்டோம் அவர்களுக்குப் பின் வேறு தலை முறைகளை உண்டாக்கினோம்
(அல்குர்ஆன் : 6:6)
முற்றும்