அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அதிமுக சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு முதலாமாண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல இடங்களில் அதிமுக நிர்வாகிகள் சார்பாக பேரணி மற்றும் நினைவு அஞ்சலி மறைந்த ஜெயலலிதாவிற்கு செலுத்தி வருகிறார்கள்.
தஞ்சை தெற்கு மாவட்டம்,அதிராம்பட்டினம் அதிமுக நகர கிளை சார்பாகவும் பேருந்துநிலையத்தில் இன்று காலை அமைதி நகர கழக செயலாளர் A.பிச்சை அவர்களின் தலைமையில் பேரணியாக சென்று மறைந்த ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினா்.
இந்நிகழ்ச்சியில் அதிரை அதிமுக நகர செயலாளர் A.பிச்சை,துணை செயலாளர் தமீம்,அதிமுக நகர நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் பங்கேற்றனர்.