Friday, March 6, 2026

அலட்சியம் காட்டும் அதிரை காவல்துறை!!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் இருசக்கர வாகனம் திருட்டு போய் உள்ளது.

மாரிமுத்து, பேரூராட்சி துப்புறவு பணியாளரான இவர்  இன்று அதிகாலையில் அதிராம்பட்டினம் காவல்நிலையத்திற்கு அருகில் உள்ள டீ கடைக்கு தன்னுடைய இருசக்கர வாகனம் HERO SPELNDER TN -49 As-3690 என்ற வாகன எண் கொண்ட வண்டியை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கையில் வாகனம் திருட்டு போயுள்ளது.இதனை கண்ட மாரிமுத்து அதிர்ச்சியடைந்து,வாகனத்தை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அண்மைகாலமாக அதிரையில் திருடர்களின் கை வரிசை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு அனுமதி தராத காவல்துறை திருடர்களின் திருட்டை மட்டும் கண்டும் காணாமல் இருக்கிறது.மேலும் காவல்துறையில் திருட்டு சம்பவங்கள் குறித்து புகார் கொடுக்க செல்கையில் புகாரை வாங்குவதில்லை என்றும்,தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாகவும்,லஞ்சம் கேட்கப்படுவதாகவும் வாகனத்தை தொலைத்தவர்கள் காவல்துறை மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம்...

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல்...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.

மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின்...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில்...

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு,...
spot_imgspot_imgspot_imgspot_img