நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. இந்நிலையில் அதிரை நகராட்சியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, இன்று பிற்பகல் முதல் திமுக பிரமுகர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட உள்ளனர்.
அதன்படி தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான S.S. பழனிமாணிக்கம் MP, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை MLA, திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன் ஆகியோர் திமுக கூட்டணியின் நகராட்சிமன்ற வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிற்பகல் 2 மணிமுதல் மாலை 5.30 மணிவரை அதிரையின் பிரதான வீதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
