64
அதிரை 11வது வார்டு உறுப்பினராக திமுக-வை சேர்ந்த இஸ்மாயில் நாச்சியா NKS சரீஃப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், காலியார் தெருவில் நீண்ட நாட்களாக அமைக்கப்படாமல் இருந்த மின் மாற்றியை உடனடியாக அமைத்து தருமாறு அதிரை மின்சார வாரிய உதவி பொறியாளரை NKS சரீஃப் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து இன்று காலை முதல் அந்த இடத்தில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதனை NKS சரீஃப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.