56
உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த அதிரையை சேர்ந்த நவீன் சூரியா, கடந்த சில தினங்களுக்கு முன் ஊர் திரும்பினார். அவரை அதிரை நகர காங்கிரஸ் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் உக்ரைன் நிலவரம் குறித்தும் மாணவரிடம் கேட்டறிந்தனர். முன்னதாக அதிரையை சேர்ந்த மாணவர்களை உக்ரைனிலிருந்து மீட்கும் முயற்சியாக சம்மந்தப்பட்ட துறையினருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாயிலாக காங்கிரஸ் நகர தலைவர் தமீம் அன்சாரி தகவல்களை கொண்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.