48
அதிரை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சுகாதார துறை சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் இளைஞர் பிரிவான SISYA அமைப்பினர், காதிர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை தனித்தனியாக சந்தித்து மாணவர்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகள் மற்றும் கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதலின்றி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த கூடாது எனவும் SISYA அமைப்பினர் வலியுறுத்தினர். இந்நிலையில், பெற்றோரின் ஒப்புதலின்றி மாணவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படாது என்று தலைமை ஆசிரியர்கள் உறுதி அளித்துள்ளனர்.