வெளிநாட்டு அதிரை மக்களுக்கு சிறு சேமிப்பு திட்டம் ..!
எனது வேண்டுகோளை…?
அஸ்ஸலாமு அலைக்கும் …
அதிரை பைத்துல்மால் சேவைகலளை அவப்போது பட்டியல்லிட்டு காட்டிவருவதை கண்டு மிக மகிழ்ச்சி அடைகிரோம்.
இது போன்று மேலும் அதிரை பைத்துல்மால் சேவைகல் தொடர எனது வாழ்த்துக்கள்.
நமது ஊர்களில் எத்தனையோ குடும்பங்கள்க்கு பைத்துல்மால் முன்வந்து சேவை செய்தது பலரும் அறிந்ததே.
உங்களால் சிலர் பைத்துல்மால்க்கு மனம்முன்வந்து பணம் உதவியதினால் நமதூரில் 35 % பகுதி பைத்துல்மால் சேவையே நிறைவேத்தி செய்து வருகிறது.
மேலும் தொய்வு ஏற்ப்படாமல் இருக்க ஆலோசனை செய்தால் நன்ராக இருக்கும்.
ஒரு சிலர் பேச படுகிறார்கள்.
எனக்கு எதுவும் செய்ய வில்லை என்று சிலர் குறைகள் கூறுகிறார்கள்,
அதற்க்கு காரணம் என்ன ?
பாக்கி 65 % பகுதி பணம் வசதி படைத்தவர்கள் ஜாகாத்,சதக்கா, கொடுக்காமல் இருப்பதுதான் இதன் காரணம், தயவு செய்து நாம் அனைவரும் அல்லாஹுவுக்காக சேவைகள் மேலும் தொடர முன்வர வேண்டும்.
நமது பைத்துல்மால் சிறு சேமிப்பு திட்டம் நாம் அனைவரும் செய்ல் பாட்டினை கொண்டுவர வேண்டும்,
நமது ஊரைசார்ந்த சகோதரர்கள் அயல்நாடுகளில் பல்வேறு இடங்களில் இருக்கின்றார்கள் அனைவரும் சிறுசேமிப்பு திட்டம் தொடங்கலாமே..!
ஒரு மாதத்திற்கு உதாரணமாக 100 திர்ஹம்,ரியால்,டாலர் பைத்துலமாளுக்கு செலுத்தி வந்ததால் ஒரு ஆண்டு கழித்து ஊருக்கு போகிறோம் என்று வைத்துக்கொள்வோம் அப்பொழுது ஒரு மாதத்திற்கு முன்பாகவே அதிரை பைத்துல்மால் தகவல் தெரிவித்தால் ஊரில் சென்று மொத்தமாக வாங்கிகொல்லாம்.
இல்லையெனில் அங்கைய சேமிப்பு வைக்கலாம்.
இந்த பணத்தை வைத்து மேலும் பலருக்கும் உதவ முடியும்
நமது பணம் பத்தரமாகும் இருக்கும், பைத்துல்மால் சேவை செய்ய ஊக்கமாகவும் இருக்கும்.
நீங்க உதவ முன்வாருங்கள் அல்லாஹ் இவ் உலகத்துலையும் மருமையிளையும் வெற்றியே பரக்கத்தையும் தருவானாக “ஆமின் ”
MST. சிராஜுதீன்