Home » இது நவீன நீர்வழி பாதையல்ல!! அதிரையின் பிரதான சாலை!

இது நவீன நீர்வழி பாதையல்ல!! அதிரையின் பிரதான சாலை!

0 comment

அதிரை நகராட்சிக்குட்பட்ட 17வது வார்டு பிஸ்மி மெடிக்கல் முதல் அரசு மருத்துவமனை வரையில் உள்ள பிரதான சாலை பல்லாண்டுகளாக புனரமைக்கபடாததால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

மருத்துவமனை உள்ளிட்டவற்றுக்கு செல்ல இந்த சாலையை தான் ஆயிரக்கணக்கான  மக்கள்  பயன்படுத்தி வருகின்றனர்.

இச்சாலையில், அவசர ஊர்தி , பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களும், இரு சக்கர வாகனங்கள், லாரி போன்ற கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்கிறது. இச்சூழலில் சாலையில் சிதறிக் கிடக்கும் ஜல்லிக்கற்கள் காரணமாக அடிக்கடி பழுதடைவதோடு வாகனங்கள் விபத்துக்களிலும் சிக்கும் அபாயம் உள்ளது. சிறுமழைக்கே சாலையில் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும்  சிரமத்துக்குள்ளாகுகின்றனர்.

இதுகுறித்து பேரூராட்சி கால கட்டத்தில் பலமுறை புகார் அளித்துள்ளோம் நகராட்சி தரம் உயர்த்தப்பட்ட பிறகும் மூன்று முறை நகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளோம் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. புதிதாக பொறுப்பெற்ற நகராட்சி மன்றம் இதனை இனியும் கண்டுக்கொள்ளாவிட்டால் மக்களாக திரண்டு நகராட்சியை முற்றுகையிடுவோம் என அப்பகுதி வாசிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter