Home » அதிராம்பட்டினம்காதிர் முகைதீன் கல்லூரியின் விளையாட்டு விழா – மாரத்தான் போட்டி!

அதிராம்பட்டினம்காதிர் முகைதீன் கல்லூரியின் விளையாட்டு விழா – மாரத்தான் போட்டி!

by
0 comment

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் 67 வது ஆண்டு விளையாட்டு விழாவை முன்னிட்டு இன்று (23.05.2021) காலை 7 மணியளவில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான 6km – மினி மாரத்தான் ஓட்டப்போட்டி நடைப்பெற்றது. இப்போட்டி கல்லூரி நுழைவு வாயிலில் தொடங்கி இராஜாமடம் சென்று திரும்பி கல்லூரி நுழைவு வாயிலில் முடிவடைந்தது.

இப்போட்டியில் 50 நபர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டியை கல்லூரி துனைமுதல்வர் முனைவர். N.M.I. அல்ஹாஜ் துவக்கிவைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஆய்வக பணியாளர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.


இதில் P. சத்யானந்தன், III B.A. வரலாற்று துறை மாணவர் முதலிடத்தையும், இரண்டாம் இடத்தை D. சச்சின், III B.Sc. தாவரவியல் மாணவரும் மற்றும் மூன்றாம் இடத்தை S. ராதாகிருஷ்ணன், I B.Sc. கணினி அறிவியல் மாணவரும் பிடித்தனர்.
அதிராம்பட்டினம் 1 No. பள்ளியில் முதல் வகுப்பு படிக்கும் கமலி காஸ்டி (5 வயது) என்று சிறுமி கலந்து கொண்டு 6km தூரத்தையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்து சிறப்பு பரிசு பெற்றார். இந்த சிறுமிக்கு கல்லூரி செயலர் முதல்வர் துணை முதல்வர் பேராசிரியர்கள் அலுவலக ஆய்வகப் பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர். K. முருகானந்தம் செய்திருந்தார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter