ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் துயரத்திற்கு நீதி வழங்கக் கோரி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, அவ்வமைப்பின் வட்டார ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். அவ்வமைப்பின் வட்டார நிர்வாகி நடராஜன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் முரளி வழக்குரைஞர் ஜெயபாண்டியன் வேதாரண்யம் வட்டார ஒருங்கிணைப்பாளர் தனியரசு மாநில பொருளாளர் காளியப்பன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.